சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக கேஸ் சிலிண்டரின் விலை 135 ரூபாய் குறைந்துள்ளநிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை எப்போது குறையும் என இல்லத்தரசிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒவ்வொறு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. அந்த வகையில் இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக கேஸ் சிலிண்டரின் விலை 135 ரூபாய் குறைந்துள்ளது. 2508 ரூபாய்க்கு விற்று வந்த வணிக கேஸ் சிலிண்டர் 2373 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
ஆனால் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி 1018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வீட்டு உபயோக சிலிண்டர் விலை எப்போது குறையும் என இல்லத்தரசிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Posts by Sakthi Paramasivan.k:
- நெல்லை வழி எழும்பூர்-தென்காசி சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்யலாம்!
- தீப விழா; தென்காசி வழி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்!
- தென்னகத்தின் முதல் விஸ்டாடம் கோச் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
- சபரிமலை யாத்திரை; பஸ் போக்குவரத்தில் கோட்டை விடும் தமிழக அரசு!
- தென்மாவட்ட பயணிகளுக்கு ‘ஜாக்பாட்’; இந்த ரயில்களுக்கு எல்லாம் புதிய LHB பெட்டிகள்…!


