நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் தனியார் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்ப ரூ.25 கோடிக்கு விற்பனை..!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் நிகழ்ச்சியை தனியார் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்ப ரூ.25 கோடிக்கு விற்று இருப்பதாக கூறப்படுகிறது.

திருமண விழாவையொட்டி விக்‌னேஷ் சிவனின் சகோதரிக்கு நயன்தாரா 30 பவுன் தங்க நகை வாங்கி பரிசளித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரது நெருங்கிய உறவினர்கள் அனைவருக்கும் தனித்தனியாக பரிசு பொருட்கள் வழங்கி இருக்கிறார். ரூ.25 கோடி திருமண நிகழ்ச்சிகள் நேற்று முன்தினத்தில் இருந்து மெஹந்தி சடங்குகளுடன் தொடங்கின. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 100 பேர் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

திருமண நிகழ்ச்சியை தனியார் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பும் உரிமையை ரூ.25 கோடிக்கு விற்று இருப்பதாக கூறப்படுகிறது. எனவே திருமணத்தை நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை உள்ளடக்கி ஒரு சினிமா போல் படமாக்கி தரும் பொறுப்பை டைரக்டர் கவுதம் மேனனிடம் ஒப்படைத்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.

இதனால் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியில் கசிந்து விடாமல் இருக்க திருமணத்தில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். கட்டுப்பாடுகள் திருமணம் நடக்கும் அரங்குக்குள் செல்போன் கொண்டு வரவும் புகைப்படம் எடுக்கவும் தடை விதித்துள்ளனர். அழைப்பிதழ் வைத்து இருப்பவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்க வாயிலில் தனியார் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்தி நடிகை கத்ரினா கைப் திருமணத்தை தனியார் நிறுவனம் பொறுப்பேற்று நடத்தியது போல் நயன்தாரா திருமண ஏற்பாடுகளையும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து உள்ளனர். அவர்கள் விருந்தினர்கள் பட்டியலை கையில் வைத்து அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பது உள்பட அனைத்து பணிகளையும் கவனித்து வருகிறார்கள்.

திருமணம் இந்து முறைப்படி நடந்தது.திருமணத்தில்ரஜினிகாந்த் நடிகர் நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட 200 பேர் பங்கேற்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, சிரஞ்சீவி, இந்தி நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்த நிலையில் அவர்களில் பலர் திருமணத்துக்கு வந்திருந்தனர்‌.

இந்தநிலையில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு நாளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தும் பொறுப்பை விக்னேஷ் சிவனிடம் தமிழக அரசு ஒப்படைத்து உள்ளது. இதை தனது திருமண பரிசாக கருதுவதாக விக்னேஷ் சிவன் தெரிவித்து உள்ளார். கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ள இடத்தை திருமண வேலைக்கு இடையிலும் அரசு அதிகாரிகளுடன் நேற்று விக்னேஷ் சிவன் பார்வையிட்டார்.

IMG 20220609 164500 378 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories