நடுக்கடலில் நிற்கும் சொகுசு கப்பல்..

Published:

சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் புதுச்சேரியில் அனுமதி தரப்படாததால் நடுக்கடலில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை துறைமுகத்தில் கார்டிலியா என்கிற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து சொகு கப்பல் சுற்றுலா திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை அறிமுகம் செய்தது. சென்னையில் இருந்த புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சொகுசு கப்பலில் மக்கள் பயணம் செய்யும் வகையில் சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முன்பதிவு செய்து ஏராளமான மக்கள் கப்பலில் சுற்றுலா சென்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் புதுச்சேரியில் அனுமதி தரப்படாததால் நடுக்கடலில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி அரசு அனுமதி அளிக்காத நிலையில் கீரப்பாளையம் லைட் ஹவுஸ் அருகே சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் நிறுவனத்தின் சொகுசு பயணிகள் கப்பல் சேவை திட்டத்தை சில நாட்களுக்கு முன் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

‘கோர்டிலியா குரூஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கு சொகுசு கப்பலில் பயணிக்கும் வகையிலான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்ததும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
1709521 ship 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img