மேட்டூர் அருகே காவிரியில் மூழ்கி சிறுமிகள் இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சேத்துக்குழியைச் சேர்ந்தவர் முருகேசன் சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது தம்பி பெரியசாமி பெரியசாமியின் மகள்மகள் பவித்திரா (10), முருகேசன் மகள் காமாச்சி இருவரும் பள்ளி விடுமுறையில் சேத்துக்குளி யிலுள்ள பாட்டி பாப்பாத்தி வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு வந்தனர்.

இன்று காலை கிராமத்தின் அருகே உள்ள காவிரியில் குளிப்பதற்கும் துணி துவைப்பதற்காகவும்காவிரிக்கு சென்றனர் அங்கு எதிர்பாராத விதமாக இருவரும் ஆழமான பகுதியில் சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பாப்பாத்தியின் கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று குழந்தைகளின் சடலத்தை மீட்டு வந்தனர். குழந்தையின் சடலம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.