ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் ஓபிஸ் வந்ததும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் முழங்கியதால் பரபரப்பு நிலவியது.



அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிகாலையிலேயே குவிந்ததால் வானகரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. ஒற்றை தலைமை விவகாரத்தை வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய எடப்பாடி அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல், வானகரம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. தொண்டர்களின் உணர்வுக்கேற்ப பொதுக்குழு நடைபெறுகிறது. தொண்டர்களின் உணர்வு, குரலை யாராலும் தடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள மண்டபத்தில் இன்று நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்களில் மூலம் வானகரத்தில் குவிந்து வருகின்றனர். மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் முயற்சியில் போக்குவரத்து போலீசால் ஈடுபட்டு வருகின்றனர்.



வானகரம் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாற்று பாதையில் பயணம் மேற்கொண்டனர். இதனால் பொதுக்குழு கூட்டம் சற்று தாமதமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க வந்த உறுப்பினர்கள் கையெழுத்திடும் நடைமுறையை பின்பற்றவில்லை என தகவல். கையெழுத்திடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும் உறுப்பினர்கள் பின்பற்றவில்லை.
மொத்தம் உள்ள 2,625 பொதுக்குழு உறுப்பினர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு 2505 பேரும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு 120 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகியவண்ணம் உள்ளது. மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 69 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. எம்.எல்.ஏ.க்களில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கத்தை தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் மற்ற அணிகளின் தலைவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். 2,500 போலீசார் குவிப்பு தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காத வண்ணம் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு வரலாறு காணாத வகையில் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட இருக்கிறது. சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். அடையாள அட்டைகளுடன் வரும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டும் கூட்டத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.இந்த நிலையில் பொதுக்குழுவில் பங்கேற்க மண்டபத்தில் ஏபிஎஸ் நுழைந்ததும் ஒற்றை தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் கோஷமிட்டனர்.பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற மேல்முறையீடு மனுவை விசாரித்த தனி நீதிபதிகள் தடை விதித்துள்ளதால் குரல் வாக்கெடுப்பு நடத்தியும் அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி யைதேர்வு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எடப்பாடி அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.





