ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் நிராகரித்த பொதுக்குழு..

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரித்துவிட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

opsepsadmk.jpeg 1 - 2026

பரபரப்பான சூழ்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்பட சுமார் 2,500 செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். பொதுக்குழு மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு நடுவே அவைத் தலைவர் தமிழ் மகன் உசைன் அமர்ந்து இருந்தார். பொதுக்குழுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். பன்னீர்செல்வம் முன்மொழிந்தது எடப்பாடிபழனிசாமி வழிமொழிந்தார்.

பின்னர் பொதுக்குழு தீர்மானங்களை பொன்னையன் முன்மொழிவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் குறுக்கிட்டு, 23 தீர்மானங்களையும் அதிமுக பொதுக்குழு நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பொதுக்குழு தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டார்கள்.ஒற்றைத் தலைமை வர வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அனைத்து தீர்மானங்களும் அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும். அடுத்த பொதுக்குழு கூட்டம் எப்போது நடைபெறும் என்பதும் தற்போது முடிவு செய்யப்படும்.னைத்து உறுப்பினர்களின் கோரிக்கை ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்பது தான்,என்றார். தமிழக சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு கட்சியின் பொதுக்குழுவில் ஒட்டுமொத்த தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories