நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார்-உச்சநீதிமன்றம்

Published:

முகமது நபி குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நுபுர் சர்மா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நுபுர் சர்மவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

752246 suprimcourt nubur - 2026

இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவும், நவீன் ஜிண்டாலும் ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டு, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்களை கைது செய்ய வலியுறுத்தி கடந்த நாட்டின் பல இடங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். நுபுர் சர்மாவுக்கு எதிராக இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

நுபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு இடங்களில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் நாடுகளும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து உள்ளன அமெரிக்காவும் விமர்சனம் தெரிவித்து உள்ளது. நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என பரவலாக கோரிக்கைகள் எழுந்த நிலையில், அவர் மீது பல்வேறு பாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நுபுர் சர்மா கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை சாடி வருகின்றன. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கடை நடத்தி வந்த கண்னையா லால் என்பவர், நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டததாக கூறப்படுகிறது. இதனால், அவரை பட்டப்பகலில் கடைக்குள் வைத்து இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் தலையை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவமும் நடந்துள்ளது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இந்த நிலையில் நுபுர் சர்மா மனு தாக்கல் செய்திருந்த மனு  வழக்கு விசாரணையின் போது இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நுபுர் சர்மவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது,

நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார். நுபுர் சர்மாவுக்கு எதிராக பதிவான புகார்களின் மீது டெல்லி போலீஸ் என்ன செய்கிறது. அவர் நடந்து கொண்ட விதம் , அதன் பிறகு அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்ககேடானது. உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்டது நுபுர் சர்மாவின் பேச்சால்தான்.டி.வி.யில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்கவேண்டும். ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பதால் எதைவேண்டுமானாலும் பேசி விடமுடியாது.நாட்டில் தற்போது நடப்பதற்கு இந்த பெண்மணியே பொறுப்பு என கூறினார்கள்.

நுபுர் சர்மா தம்முடைய கருத்துகளை வாபஸ் பெற்றது என்பது காலம்தாழ்த்திய செயல்.நுபுர் சர்மா தமது உயிருக்கு ஆபத்து என்கிறார். அவரால்தான் இந்த ஒட்டுமொத்த நாட்டுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. நுபுர் சர்மா போன்றவர்கள் ஒருவித செயல்திட்டத்துக்காகவே பேசுகின்றனர். இப்படி பேசுவதன் மூலம் விளம்பரம் தேடுகின்றனர்.  நுபுர் சர்மா மீது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவே? நுபுர் சர்மாவை ஏன் டெல்லி போலீசார் கைது செய்யவில்லை? விசாரணைக்குப் போன நுபுர் சர்மாவுக்கு சிவப்பு கம்பள மரியாதை கிடைத்ததா? அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எப்படி சரியாகும்? இதுஜனநாயக நாடுதான். இங்கே பேச்சுரிமையும் இருக்கு.. புல் வளர்வதற்கும் உரிமை இருக்கு.. அதே புல்லை கழுதை மேய்வதற்கும் கூட உரிமை இருக்கிறது.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

தாம் பேசியதால் ஏற்படும் எதிர்விளைவுகளை கொஞ்சமும் யோசிக்காமல் பேசியிருக்கிறார் நுபுர் சர்மா. ஆகையால் அனைத்து வழக்குகளையும் டெல்லி மாற்ற கோரும் நுபுர் சர்மா மனு நிராகரிக்கப்படுகிறது. மேலும் எந்தவொரு பரிகாரத்தையும் தேட ஐகோர்ட்டை அணுக வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img