அந்தமான் தீவுகளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம்..

வங்கக்கடலில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

images 1 - 2026
images 2 - 2026

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் சாலையிலேயே தஞ்சமடைந்தனர். முதல் நிலநடுக்கம் 11.05 மணிக்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. அடுத்ததாக பிற்பகல் 1.55 மணிக்கு 4.5 என்ற அளவுகோலில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்த நிலையில், மூன்றாவதாக 2.06 மணிக்கு 4.6 ஆக நிலநடுக்கம் பதிவானது. பிறகு, இதையடுத்து 2.37, 3.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7, 4.4 ஆக பதிவாகியது. இதைத் தொடர்ந்து 3.25, 3.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது போர்ட் பிளேயர் அருகே 4.6, 3.8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, இன்று அதிகாலை 2.54 மணியளவில் போர்ட்பிளேயருக்கு தென்கிழக்கே 244 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 4.4 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. மேலும் போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்து 215 கிமீ இஎஸ்இ தொலைவில் இன்று காலை 5.57 மணிக்கு ஏற்பட்டதாக 5.0 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. வளைகுடாவில் இருந்து 44 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி ஏற்படும் அபாயமும் இருப்பதாக கூறப்பட்டுள்ளதால் மீனவர்களுக்கும், கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கும் பாதுப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்ததப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories