செங்கல்பட்டு அருகே பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அச்சரப்பாகம் அடுத்த தொழுப்பேடு அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் இருந்து பயணிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.