தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல்..

Published:

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ஜூலை 12ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

images 42 - 2026
images 45 - 2026

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பெரியபுலியூர் 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.ஈரோடு மாவட்டம் அத்தாணி, அம்மாபேட்டை பேரூராட்சிகளில் தலா ஒரு வார்டுகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பனங்காட்டேரி, காமனூர் தட்டு உள்ளிட்ட 9 வார்டுக்கு 6 மையங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.9 வார்டுகளில் ஒன்றிய குழு வார்டு உறுப்பினர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் விடுபட்ட 36வது வார்டுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தின் 4வது வார்டுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

*க்ஷதிருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 5 இடங்களில் வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

கரூர் மாவட்டம் க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில் உள்ள 2 ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img