காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா‌ இன்று கோலாகலம்…

பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா‌ இன்று கோலாகலமாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

FB IMG 1657597554110 - 2026

இந்த ஆண்டு
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா‌ திங்கள்கிழமை மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

சிவபெருமான் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் எளிமையான முறையில் நடந்த விழா இந்த ஆண்டு சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1500x900 1728374 thirukalyanam - 2026

இந்த ஆண்டு விழா திங்கள்கிழமை மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. முன்னதாக, பரமதத்த செட்டியார், ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலமாக புறப்பட்டு காரைக்கால் அம்மையார் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு திருக்கல்யாணமும், மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் (சிவன்) வெள்ளை சாத்தி புறப்பாடு நடைபெற்றது .

mangani thiruvizha - 2026

இன்று புதன்கிழமைபிச்சாண்டவ மூர்த்தி மற்றும் பஞ்சாமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், அதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு, பிச்சாண்டவர் திருவீதியுலாவும், அதுசமயம் நேர்த்திக்கடனாக பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சியும் கோலாகோலமாக துவங்கி நடந்து வருகிறது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வதற்காக வீடுகளிலிருந்தும் வீட்டு மாடிகளிலிருந்தும் மாம்பழங்களை வீசி எறிவதும் அம்மாம்பழங்களை கீழே நிற்கும் பக்தர்கள் தாவித்தாவிப் பிடிப்பதும் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. பக்தர்கள் வீசியெறியும் மாம்பழங்களைப் பிடித்து உண்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  

மாங்கனி திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காரைக்காலில் வந்து குவிந்தனர். ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மாங்கனிகளை இறைத்து வேண்டுதல் நிறைவேற்றி வருகின்றனர். இதனால் காரைக்கால் முழுவதும் திருவிழா கோலம் கொண்டுள்ளது.

கணவர் பரமதத்தர் வீட்டிற்கு அனுப்பிய 2 மாம்பழங்களில் ஒன்றை சிவனடியாருக்கு அமுதிட்டு, பின்னர் இறைவன் சிவபெருமானிடம் வேண்டி அதிமதுர மாங்கனியை காரைக்கால் அம்மையார் பெற்றதாக ஐதீகம். இவ்வரலாற்றுச் சம்பவத்தை நினைவுகூரும் விதமாகத்தான் ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 6 மணிக்கு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூலை14-ந் தேதி அதிகாலை அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories