ஏபிஎஸ் ஏட்டிக்கு, போட்டியாக செய்து எதையும் சாதிக்க முடியாது-செல்லூர் ராஜூ…

ஓபிஎஸ்க்கு அ.தி.மு.க. கதவு அடைக்கப்படவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமியிடம் பேசி ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர வேண்டும் என்று அமைப்பு செயலாளர் செல்லூர் ராஜூ கூறியுள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

images 38 1 - 2026

அ.தி.மு.க. கதவு அடைக்கப்படவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமியிடம் பேசி ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர வேண்டும் என்று அமைப்பு செயலாளர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநகர் மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நான் கேட்காமலே எனக்கு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைப்பு செயலாளர் பதவி கொடுத்து இருக்கிறார். எனவே நான் என்றைக்கும் அவருக்கு விசுவாசமாக இருப்பேன். அதனை செயலிலும் காட்டுவேன். மீண்டும் எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சர் ஆவார். அதற்காக நான் பாடுபடுவேன். காமராஜர் பிறந்த நாளன்று, அமைப்பு செயலாளராக பொறுப்பு ஏற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனுக்கும், புனித தலம் அ.தி.மு.க. தலைமை அலுவலகம்தான். எம்.ஜி.ஆர். வீடுதான் அவரது இறப்புக்கு பின் கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டது. அந்த அலுவலகத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

4 பெரியதா?, 100 பெரியதா? என்றால், 100 தான் பெரியது. அது போல எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி ஒன்றுபட்டு நிற்கிறது. அவர் தான் கட்சியை வழிநடத்தக்கூடியவர். அவரது ஆட்சி காலம் தமிழகத்தில் பொற்காலமாக இருந்தது. பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். கொரோனாவை கட்டுப்படுத்திய சாதனையாளர். அவரது ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஏட்டிக்குப்போட்டி என்னை பொறுத்தவரை பிரிந்தவர்கள், பொதுச்செயலாளரிடம் பேசி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய வேண்டும். சகோதரர்கள் இடையே சண்டை, சச்சரவுகள் ஏற்படுவது சகஜம்தான். அ.தி.மு.க. கதவு அடைக்கப்படவில்லை. தலைவர்கள் மனம் திருந்த வேண்டும். மனம் மாற வேண்டும். அதிக உறுப்பினர்கள் ஆதரவு இருப்பவர்கள்தான் தலைமையேற்க வேண்டும். அவர்கள் தான் அ.தி.மு.க.வை வழிநடத்த முடியும். இது தான் கட்சிக்கு நல்லது. கட்சி வளர்ச்சி பெறும்.

தமிழக மக்களும், கட்சி தொண்டர்களும் விரும்பும் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் மனம் திருந்தி, பொது செயலாளரிடம் நடந்த சம்பவங்கள் தொடர்பாக பேசி கட்சியில் சேர முடியும். அண்ணன் ஓ.பன்னீர்செல்வம், எங்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்குவதாக சொல்கிறார். அவர் ஏட்டிக்கு, போட்டியாக செய்வதால் எதையும் சாதிக்க முடியாது. தற்போது அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலுவாக உள்ளது.

பொன்னையன் ஆடியோ பொன்னையன் பேசிய ஆடியோவில் இருப்பது தவறான கருத்துக்கள். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிசாமி பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். அ.தி.மு.க.வில் சாதி, மதம், இனம், பணக்காரன், ஏழை, படித்தவர், படிக்காதவர் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள். தி.மு.க.வின் வாரிசு அரசியல், ஊழல் ஆகியவற்றை ஒழிப்போம். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமைப்போம்.

அ.தி.மு.க.வில் முக்குலத்தோருக்கு பதவி தரவில்லை என்று சொல்வது தவறு. இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, விரைவில் நிரந்தர பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று இந்த மீனாட்சி பட்டணத்தில் இருந்து கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories