பாக்கெட் அரிசி, கோதுமை, உணவுப் பொருட்களுக்கு இன்று முதல் 5% ஜிஎஸ்டி

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான 5% ஜிஎஸ்டி இன்று முதல் அமலுக்கு வந்தது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் 28, 29 ஆகிய 2 தேதிகளில் நடந்தது. இதில் பாக்கெட் பொருட்கள் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தி அமைக்க முடிவானது. அதன்படி, புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

கடந்த ஜூன் மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், முன்கூட்டியே லேபிளிடப்பட்ட ஆட்டா, பன்னீர், தயிர்,அரிசி உள்ளிட்ட சில்லறை பொருட்கள் மீது 5%, காசோலைகள் வழங்க வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18%, மருத்துவமனையில் அறை வாடகை (தீவிர சிகிச்சை பிரிவு தவிர்த்து) நோயாளி ஒருவருக்கு, நாளொன்றுக்கு ரூ.5000க்கு மேல் வசூலிக்கப்படும் தொகைக்கு 5 %,  அட்லஸ் உள்ளிட்ட வரைபடங்களுக்கு 12% வரி விதிக்கப்பட்டது.

இது தவிர, தங்கும் விடுதிகளின் வாடகை நாளொன்றுக்கு ரூ.1000 ஆக இருத்தல், எல்இடி விளக்குகள், சாதனங்கள், கத்திரிக்கோல் உள்ளிட்ட தையல் சார்ந்த பொருட்கள், பென்சில், ஷார்ப்னர்கள் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள், பிளேடுகள், ஸ்பூன்கள், போர்க்ஸ் போன்ற சில்வர் பொருட்கள், லேடிஸ் ஸ்கிம்மர்கள், கேக் ஆகியவற்றின் மீது தற்போது வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டது.

சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரித்து நிலையங்கள் மற்றும் மயான பணி ஒப்பந்தங்கள் போன்ற சில சேவைகளுக்கும் தற்போதைய 12%ல் இருந்து 18% ஆக ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளது. தனியாரிடம் செய்யப்படும் ராணுவ கொள்முதல், ராணுவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூலை 18 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த வரிமாற்றம் இன்று அமலுக்கு வந்தது.

images 2 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories