மாணவி ஸ்ரீமதி உடல் மறுகூறாய்வை இன்று நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூறாய்வை இன்று நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம், பெரியநெசலூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகள் ஸ்ரீமதி (16). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கிருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், பள்ளி விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து கடந்த 13-ந்தேதி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதை மாணவியின் பெற்றோர் ஏற்கவில்லை. மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவர்கள் உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று முன்தினம் கலவரமாக வெடித்தது. பள்ளி வளாகமே சூறையாடப்பட்டது. இதற்கிடையில், “தன் மகள் மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். அதில் எங்கள் தரப்பு டாக்டரையும் இடம்பெற செய்ய வேண்டும்” என்று மாணவியின் தந்தை ராமலிங்கம், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் நேற்று காலையில் உத்தரவு பிறப்பித்தார். அதில், மறுபிரேத பரிசோதனை செய்யும் குழுவில் மனுதாரர் தரப்பு டாக்டர்கள் இடம்பெறவில்லை என்பதால், இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய மனுதாரர் ராமலிங்கம் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இந்த அப்பீல் வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு ராமலிங்கம் தரப்பு வக்கீல் சங்கர்சுப்பு முறையிட்டார்.

ஆனால், இவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தான் அப்பீல் செய்ய வேண்டும். ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் அப்பீல் செய்ய முடியாது என்று கூறினர்.

இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை தரப்பு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் மாணவியின் உடல் மறுகூறாய்வை இன்று நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது என்றும், மறு உடல் கூறாய்வு செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடனிருக்க கோரி மாணவியின் தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரிப்பதாகவும் சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும் ஏன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தீர்கள்? ஐகோர்ட்டின் மீது நம்பிக்கை இல்லையா? நீதிமன்றம் அமைத்த மருத்துவர் குழுவை குறை கூற வேண்டாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

images 51 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories