சோதனை என்ற பெயரில் தோனியை அலைக்கழித்த விமான நிலைய அதிகாரிகள்

சற்றுமுன்

dhoni அடிலெய்ட் சோதனை என்ற பெயரில் இந்திய அணி கேப்டன் தோனியை விமான நிலைய அதிகாரிகள் அலைக்கழித்துள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வரும் பிப்.22 ஆம் தேதி மெல்பேர்ன் நகரில் நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி விளையாடுகிறது. இதற்காக, மெல்போர்ன் செல்ல இந்திய அணி வீரர்கள் அடிலெய்டு விமான நிலையத்துக்கு வந்தனர். பொதுவாக விமான நிலையங்களில் வி.ஐ.பி-க்களுக்கு தனியாக சோதனை செய்வர். ஆனால், இந்திய அணி வீரர்கள், மற்ற பயணிகளைப் போல் வரிசையில் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது, இந்திய அணி தலைவர் தோனி பரிசோதனை இயந்திரத்துக்கு அனுப்பப்படும் ‘டிரே’யில் தனது உடைமைகளை வைத்து விட்டு, ‘மெட்டல் டிடெக்டர்’ வழியாக அதை எடுக்கச் சென்றார். அந்தக் கருவி அப்போது ஒலி எழுப்பியது. இதனால் அதிகாரிகள் அவரை அழைத்து உடைகள் முழுதும் சோதித்தனர். அதில் ஒன்றும் இல்லை. பின்னர் மீண்டும் மெட்டல் டிடெக்டர் வழியாக அவர் சென்ற போது மறுபடியும் ஒலி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சந்தேகத்தில் அதிகாரிகள் தோனியின் ஷூவை கழற்றிப் பார்த்தனர். ஷூவின் வடிவமைப்பில் இருந்த சிறிய அளவிலான உலோகத் தகடு காரணமாக மெட்டல் டிடெக்டர் ஒலி எழுப்புவது கண்டுபிடிக்கப்பட்டதால், அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்தச் சம்பவம் அங்கே பரபரப்பை எற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.