images 2022 07 30T133854.192 - 2026

துப்பாக்கி சுடுதலில் 6 பதக்கங்களைக் குவித்த அஜித்..

சற்றுமுன்
images 2022 07 30T133854.192 - 2026

திருச்சியில் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்ற நடிகர் அஜித் குமார் பெறுள்ள பதக்க பட்டியல் வெளியாகியுள்ளது. 

நடிகர் அஜித் குமார் திருச்சியில் நடைபெற்ற 47வது தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டார். இதற்காக திருச்சி வந்த அஜித் குமார் ரசிகர்களை சந்தித்தார். 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது. நடிகர் அஜித் 10மீ, 25மீ, 50 மீ துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்றார்.இந்த நிலையில் அவர் 4 தங்க பதக்கங்களும், 2 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளாராம். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

நடிகர் அஜித் குமார் நடிகராக மட்டுமல்லாமல், புகைப்படங்கள் எடுப்பது, கார், பைக் பந்தயங்களில் பங்கேற்பது போன்ற இதர விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

Posts by Sakthi Paramasivan.k:

Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam