கேரளாவில் விடாது பெய்யும் கனபழை..ஆலுவாசிவன் கோவிலை சுற்றி வெள்ளம்

500x300 1740268 rain - 2026
rain rabbit rescue - 2026

கேரளாவில் பல பகுதிகளில் மழை விடாமல் கொட்டி வருகிறது .ஆலுவாவில் உள்ள கோவிலை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. அங்கு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

ஆலுவாவில் உள்ள கோவிலை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி கேரளாவில் கடந்த 3 நாட்களில் மட்டும் 12 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே கேரளாவில் அடுத்த 72 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர். கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. மீதமுள்ள 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதுபோல தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்கள் தங்குவதற்காக 95 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதுவரை இந்த முகாம்களில் சுமார் 2219 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முதல் மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே மழை நேரத்தில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையே நடுக்காணி-நிலம்பூர் சாலையில் இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories