இபிஎஸ் டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை-ரத்து உச்ச நீதிமன்றம்..

EPS - 2026

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்த பணிகளை உறவினர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியுள்ளதால், விசாரணை நேர்மையாக நடைபெற, வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  4800 கோடி ரூபாய் அளவிற்கு நெடுஞ்சாலை துறை டெண்டரில் முறைகேடு நடந்தாக எடப்பாடிக்கு எதிராக ஆர். எஸ் பாரதி புகார் வைத்தார்.சென்னை உயர் நீதிமன்றம் இதில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்தது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு கடந்த மாதம் 26ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வழக்கை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கிறோம் எனவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில், திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்து உத்தரவிடுகிறோம். லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.  டெண்டர் முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிடுகிறோம். லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கை அடிப்படையில் உயர்நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும்.இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்த கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல் புதிதாக மீண்டும் விசாரிக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories