அசையா சொத்து இல்லாத பிரதமர் மோடி..

Published:

Modi chess.jpeg 3 - 2026

பிரதமர் மோடியிடம் எந்த அசையா சொத்தும் இல்லை. வாகனமும் இல்லை. கடன் பத்திரங்கள், பங்குகள், பரஸ்பர நிதியம் ஆகியவற்றில் எந்த முதலீடும் இல்லை. முந்தைய ஆண்டை விட அவரது அசையும் சொத்துகள் ரூ.26 லட்சத்து 13 ஆயிரம் உயர்ந்துள்ளது.

கடந்த மார்ச் 31-ந் தேதி வரையிலான கடந்த நிதி ஆண்டுக்கான பிரதமர் மோடியின் சொத்து விவரம், பிரதமர் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முந்தைய ஆண்டை விட அவரது அசையும் சொத்துகள் ரூ.26 லட்சத்து 13 ஆயிரம் உயர்ந்துள்ளது.

தற்போதைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 23 லட்சம். அவற்றில் பெரும்பாலானவை வங்கி டெபாசிட்கள் ஆகும். கடந்த 2002-ம் ஆண்டு, குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது, காந்திநகரில் வேறு 3 பேருடன் சேர்ந்து ஒரு வீட்டு மனையை மோடி வாங்கி இருந்தார். அதில் 4 பேருக்கும் சமபங்கு உள்ளது. தனது ஒரே அசையும் சொத்தான அந்த நிலத்தில் தனது பங்கை அவர் நன்கொடையாக அளித்து விட்டார். அதனால் அவரிடம் எந்த அசையா சொத்தும் இல்லை. வாகனமும் இல்லை. கடன் பத்திரங்கள், பங்குகள், பரஸ்பர நிதியம் ஆகியவற்றில் எந்த முதலீடும் இல்லை.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

கைவசம் ரொக்கமாக ரூ.35 ஆயிரத்து 250 வைத்துள்ளார். அஞ்சலகத்தில் ரூ.9 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரங்களும், ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள எல்.ஐ.சி. பாலிசிகளும், ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்களும் வைத்துள்ளார்.

ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தனக்கு ரூ.2 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.2 கோடியே 97 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் இருப்பதாக கணக்கு சமர்ப்பித்துள்ளார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img