கேரளாவில் மழை தொடரும்…

1741215 imd123 1 - 2026

கேரளாவின் சில பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்யும் அலைகள் வேகமாக எழ வாய்ப்புகள் உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இடுக்கி நீர்த்தேக்கத்தின் செருதோணி அணை, முல்லை பெரியாறு, இடை மலையாறு, பாணாசுர சாகர், கக்கி, பம்பா உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய அணைகள், ஆறுகளில் உபரி நீர் பாய்ந்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு அணைகளும் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஒடிசா கடற்கரை அருகே புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாளை ஆக 11-ந் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு கன மழையின் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் பலத்த காற்று வீசும். இதனால் அலைகள் வேகமாக எழ வாய்ப்புகள் உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. கேரளாவில் கடந்த 31-ம் தேதி முதல் கனமழை பெய்து வருவதால் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் மாநில கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 7 பேர் இன்னும் காணவில்லை என்றும். 58 வீடுகள் முழுமையாகவும், 412 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories