முகக்கவசம் அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தவருக்கு நீதிமன்றம் ரூ.10,000 அபராதம்..

chennaihigh1a 3 - 2026

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தவருக்கு நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அவ்வாறு முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்த்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் முகக்கவசம் அணிவதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்றும், மாறாக முகக்கவசம் சுவாச பிரச்சனைஉள்ளிட்ட உடல்நல கோளாறை ஏற்படுத்துவதாகவும் மனுவை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முகக்கவசம் அணியாததால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தது தவறு என்றும், ரூ.500 குறைந்த தொகை அல்ல, இதனால் அந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீசுவர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் போதிய ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ளாமலும், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமலும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறி மனு தாரருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories