ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை..

மதுரை அலங்காநல்லூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். கணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

images 2022 08 18T111414.024 - 2026
images 2022 08 18T111206.980 - 2026

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(39). விவசாயி. இவரது மனைவி சுரேகா (36). இவர்களுக்கு திருமணமாகி யோகிதா(16) ஒரு மகளும், மோகனன் (11) ஒரு மகனும் உள்ளனர். மகள் மதுரையில் உள்ள பெண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார். மகன் பாலமேட்டில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறார். முருகன் தனது குடும்பத்துடன் குலமங்கலம் அருகே உள்ள ஒரு கொய்யா தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அங்கேயே தங்கி வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு தனது உறவினர் ஒருவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது குடும்பத்துடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் தங்களை மீட்டு அடக்கம் செய்து விடுங்கள் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்து சுவிட்ச் ஆப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த உறவினர் உடனடியாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையிலான போலீசார் அந்தத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பார்த்தபோது குடும்பத்தினர் அனைவரும் கிணற்றில் மிதந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அலங்காநல்லூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடம் விரைந்து பிரேதத்தை கைப்பற்றினர். அதில் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் இறந்து விட, கழுத்து அறுக்கப்பட்டு கணவர் முருகன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சம்பவ இடம் விரைந்து வந்த சமயநல்லூர் சரக டி.எஸ்.பி பாலசுந்தரம் மற்றும் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories