தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை..

Published:

1762269 court 1 - 2026

சிவகாசி அருகே மது குடிக்க பணம் தராத தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ3000அபராதம்விதித்து திருவில்லிபுத்தூர் மகிளா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அருணாசலபாண்டியன்(37).

இவர் தனது தாய் ஈஸ்வரியிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே, ஆத்திரத்தில் தாய் என்றும் பாராமல் அவரைக் கொலை செய்தார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து அருணாசலபாண்டியனை கைது செய்தனர். இந்த வழக்கானது, திருவில்லிபுத்தூர் மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி அருணாசலபாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img