ஜம்முகாஷ்மீர் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..

Published:

500x300 1771688 j k encounder - 2026

ஜம்முகாஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர் அப்போது டிராச் பகுதியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் என்கவுன்டன் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குனர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களில் இருவர் ஹனன் பின் யாகூப் மற்றும் ஜாம்ஷெட் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் தெற்கு காஷ்மீர் மூலு பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறப்பு காவல் அதிகாரி ஜாவேத்தார் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி கொல்லப்பட்ட சம்பவங்களில் இந்த தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூடுதல் காவல்துறை இயக்குனர் விஜய் குமார் குறிப்பிட்டுள்ளார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img