வாணியம்பாடி அருகே தடுப்பணையில் மூழ்கி 2 பேர் பலி..

TPT death 3 - 2026

வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள தடுப்பணை பகுதியில் வாணியம்பாடி நியூடவுன் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதி சேர்ந்த இலியாஸ் அஹமத் (45),
உஜேர் பாஷா (17), உவேஸ் அஹமத்(16), ராகில் பயஸ்(22), ஆகிய 4 பேர் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது தடை செய்யப்பட்ட தடுப்பணை பகுதியைக் கடந்து நால்வரும் வனப்பகுதிக்குள் குளிக்கச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் அணையில் இறங்கிய போது கால் வலுக்கியதால் உஜேர் பாஷா நீரில் விழுந்து மூழ்கியுள்ளார். இதனை தொடர்ந்து இலியாஸ் அஹமத் நீரில் குதித்து அவரை காப்பாற்ற முயன்ற போது அவரும் நீரில் மூழ்கி உள்ளார்.உடன் வந்த இருவர் கண் முன்னே நீரில் மூழ்கியதை பார்த்த உடன் மற்ற இருவரும் செய்வதறியாது திகைத்து கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆந்திர காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து சென்ற பகுதி மக்களுடன் இணைந்து நீரில் மூழ்கிய 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன்  உஜேர் பாஷா மற்றும் இலியாஸ் அஹமத் ஆகியோரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு இருவருமே சடலமாக மீட்கப்பட்டனர். 

குப்பம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories