பயணத்தை துவக்கியது வந்தே பாரத் நான்காவது ரயில்..

Published:

1775973 modi1 - 2026

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலாக வந்தே பாரத் நான்காவது ரயில் தமிழகத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று பிரதமர் மோடி இமாச்சல பிரதேசம் நாட்டின் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடங்கி வைத்தார் .

டெல்லியில் இருந்து உனாவில் உள்ள அம்ப் ஆண்டவுரா ரெயில் நிலையத்திற்குச் செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குறுகிய காலத்தில் அதிக வேகத்தை எட்டும் திறன் கொண்டது. ஹிமாச்சல பிரதேசம் உனே மாவட்டத்தில் உள்ள பெகுபெலா ஹெலிபேடுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் வரவேற்றார்.

இதையடுத்து, பிரதமர் மோடி நாட்டின் நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள உனா ரெயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் டெல்லியில் இருந்து உனாவில் உள்ள அம்ப் ஆண்டவுரா ரெயில் நிலையத்திற்குச் செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரெயில் அம்பாலா, சண்டிகர், ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் உனா ஆகிய நிறுத்தங்களில் நிற்கும் என்றும் புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் ரெயில் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது வெறும் 52 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும். ரெயிலின் அறிமுகம் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், வசதியான மற்றும் வேகமான பயண முறையை வழங்கவும் உதவும். புதிய வந்தே பாரத் ரெயில் முந்தைய ரெயில்களுடன் ஒப்பிடும்போது இது மேம்பட்ட பதிப்பாகும். இது மிகவும் இலகுவானது மற்றும் குறுகிய காலத்தில் அதிக வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

தேர்தலை சந்திக்கும் மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், உனா மற்றும் சம்பா மாவட்டங்களில் இரண்டு பொதுக்கூட்டங்களில் பிரதமர் உரையாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img