spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்ஜெயலலிதா மரணம் விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் தாக்கலால் பரபரப்பு

ஜெயலலிதா மரணம் விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் தாக்கலால் பரபரப்பு

500x300 926921 jayalalitha treatment

ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதை பற்றி டாக்டர் சுமின் சர்மா விளக்கிய பிறகும் ஆஞ்சியோ செய்யப்படவில்லை. என முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ள து.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்டது. விசாரணை ஆனையம் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் – ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.

இதையடுத்து 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்தது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.’ அறிக்கையில் 22.09.2016 அன்று இரவு சுயநினைவற்ற நிலையில் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதை பற்றி டாக்டர் சுமின் சர்மா விளக்கிய பிறகும் ஆஞ்சியோ செய்யப்படவில்லை. ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோவில் சிசிடிவி அகற்றம் ஏன்? பாதுகாவலர் வீரப்பெருமாள் டாக்டர் ரிச்சர்டு பீலே, ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்தச் செல்ல தயார் என கூறியும் அது ஏன் நடக்கவில்லை.

போயஸ் கார்டனில் மயங்கி விழுந்து ஜெயலலிதா மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டதற்கு பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா இறந்த தேதி குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளன. ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள். 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது.

ஜெயலலிதா டிச. 5ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிச. 4ம் தேதியே இறந்தார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுவதை தவிற வேறு எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் ஆணையத்தில் முன்வைக்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்போலோ வந்திருந்தாலும் ஜெயலலதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

அப்போதைய தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் செல்முறைக்களுக்காக பல்வேறு நாட்களில் 21 படிவங்களில் கையொப்பமிடுவது குறித்து அவர் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை. இது ஒரு முக்கியஸ்தரால் செய்யப்பட்ட மாபெரும் குற்றம். அப்போதைய முதல்-அமைச்சர் உயிர் தொடர்பானது என்பதால் அதன் விளைவுகளை நிச்சயம் பெறுவார்.எனவே விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ, அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஏன் கடைசி வரை நடக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு வெஜிடேசன், குடல்நோய் அறிகுறி உபாதைகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவ அறிக்கையில் குறிப்பிடவில்லை. சசிகலா – ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம். இங்கிலாந்து மருத்துவரின் வாய்வழி கருத்தை ஏற்று, இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என அப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் முதல்வரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் மருத்துவமனையின் 10 அறைகள் சசிகலா உறவினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. எனஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற பொய்யான அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டு உள்ளது. ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியது என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சுருக்கமாக, தொடக்கத்திலிருந்தே, இதயக் கோளாறு மற்றும் நுரையீரல் பிரச்சினை தொடர்பாக மருத்துவமனையால் வழங்கப்பட்ட சிகிச்சையைப் பற்றி ஆணையத்திற்கு மிகுந்த சந்தேகம் உள்ளது என்பது மிகவும் தெளிவாக உள்ளது. இஎஸ்சி வழிகாட்டுதல்களின்படி ஒரு நோயாளிக்கு 10 மி.மீ.-க்கு மேல் வெஜிடேசன் இருப்பது கண்டறியப்பட்டால், அது குறிப்பிட்ட காலத்திற்குள் மருந்து மூலம் கரைக்கப்படாவிட்டால் அதற்கு அறுவை சிகிச்சையே மாற்று தீர்வாகும். அத்தகைய நோயாளிக்கு சிகிச்சையளிப்பதில் அறுவை சிகிச்சை நிபுணரே குழுவின் தலைவராக இருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.

மேற்படி சாட்சிங்களிலிருந்து, வெஜிடேசன் 14 மி.மீக்கு மேல் உள்ளது என்பது தெளிவாக உள்ளது. மேலும், ஆறு வாரங்களுக்கும் மேலாக மருத்துகள் அளிக்கப்பட்ட போதிலும், அது குணமாகவில்லை என்றும், நுரையீரலில் திரவ சேகரிப்பு அப்படியே இருந்தது என்றும் சில வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். மருத்துவ நெறிமுறைகளின்படி அப்போலோ மருத்துவமனை அறுவை சிகிச்சை செய்து வெஜிடேசனை அகற்றி, நிலையான பெர்ஃபொரேசனை மூடியிருந்தால் அது நன்றாக இருந்திருக்கும். ஆனால் இதை செய்யவில்லை. இதை செய்து இருந்தால் ஜெயலலிதா உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று இந்த ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

561 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையின் இறுதியில் “நோய் நாடி நோய் முதல் நாடி” என்ற திருக்குறளுக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய தெளிவுரையும், “காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா” என்ற திருக்குறளுக்கு டாக்டர் மு.வரதராசன் எழுதியை தெளிவுரையும் மேற்கோள் காட்டப்பட்டு, அறிக்கையை நிறைவு செய்துள்ளார் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி.

926931 jayalalitha death 004

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe