ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்..

Published:

images 2022 10 19T143635.966 - 2026

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தற்போது நடைபெற்று வரும் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவத்தில் முக்கிய விழாவாக வரும் 21-ந் தேதி நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம்

9 நாட்கள் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு கடந்த 13-ம் தேதி தொடங்கிய இவ்விழா வரும் 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

சுவாமி நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்து சேர்வார். இரவு 7.15 மணிக்கு ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆரத்தி கண்டருள்வார். இரவு 8.15 மணி வரை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். இன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் இரவு 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார். அதன்பின் இரவு 8.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார்.. விழாவின் நிறைவு நாளான வரும் 21-ந் தேதி நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!
srirangam4 1604694076 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img