குஜராத்தில் பாலம் விபத்தில் சிக்கிய 177 பேர் மீட்பு19 பேர் சிகிச்சையில்..

images 66 3 - 2026

குஜராத் மாநிலம் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் ராஜ்கோட் பாஜக எம்.பி.யின் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர் . விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது .தான் இங்கிருந்தாலும் தனது மனம் மோர்பியாவில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார் .

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது.அந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சிதிலம் அடைந்த அந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து, மக்களின் பயன்பாட்டுக்காக குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26-ந் தேதி பாலம் திறந்துவைக்கப்பட்டது. இந்தநிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை ‘சத்’ பூஜைக்காக ஏராளமானோர் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர்.அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

இந்த பாலம் இத்தனைக்கும் சீரமைக்கும் பணிகள் முடிந்து சில நாட்களில் இந்த கோர விபத்து நடைபெற்றது தான் பெரும் துயரம். இந்த விபத்து குறித்து பல்வேறு புதுப்புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பாலத்தின் கயிறை இளைஞர்கள் சில எட்டி உதைப்பதும் பாலத்தை பிடித்து ஆட்டும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. பாலத்தில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. பாஜகவை சேர்ந்த மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியா, குஜராத்தின் ராஜ்கோட் தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவருடைய உறவினர்கள் மோர்பி கேபிள் பாலம் அறுந்து விழுந்த போது அந்த பாலத்தில் இருந்தனர். அதில் எம்.பி மோகன்பாய் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். இது குறித்து அவர் கூறியதாவது, “விபத்தில் ஐந்து குழந்தைகள் உட்பட எனது குடும்பத்தைச் சேர்ந்த 12 பேரை இழந்துவிட்டேன். மிகுந்த வருத்தத்தில் உள்ளேன்.எனது சகோதரியின் குடும்பத்தைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களை இழந்துவிட்டேன். இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அதிகம். இந்த சோக சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். உள்ளூர் மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறினார்.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

இந்நிலையில் இன்று அதிகாலை நிலவரப்படி, பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளதாக குஜராத் தகவல் துறை தெரிவித்தது. மேலும், இதுவரை விபத்தில் சிக்கிய 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களை தேடுதல் மற்றும் மீட்கும் பணியில், ராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எப், தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மீட்பு பணி இன்னும் நடந்து வருகிறது. மீட்பு பணியை துரிதப்படுத்த, இன்று அதிகாலை 3 மணிக்கு ராணுவ வீரர்கள் குழு, சம்பவ இடத்திற்கு சென்றடைந்தது என்று குஜராத் தகவல் துறை இன்று காலை வெளியிட்ட தகவலில் தெரிவித்தது.

1784195 gujarath cm 1 - 2026
950915 pmmodiji33 - 2026

தான் இங்கிருந்தாலும் தனது மனம் மோர்பியாவில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார் .

குஜராத்தின் கேவாடியாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:- குஜராத் பால விபத்து நிகழ்வால் எனது இதயம் வலியுடன் காணப்படுகிறது. ஒரு புறம் வலி நிறைந்த இதயமாக இருந்தாலும் மறுபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது. தான் இங்கிருந்தாலும் தனது மனம் மோர்பியாவில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளது. இந்தியாவின் முன்னேற்றத்தால் குழப்பமடைந்த சக்திகள் இன்றும் உள்ளன. அவர்கள் நம்மை உடைக்கவும் பிரிக்கவும் முயற்சி செய்கிறார்கள். ஜாதியின் பெயரால் நம்மை எதிர்த்துப் போராட கதைகள் உருவாக்கப்படுகின்றன. மாநிலங்களின் பெயரால் நம்மை பிரிக்க முயற்சி நடக்கிறது. ஒரு இந்திய மொழியை இன்னொரு இந்திய மொழிக்கு எதிரியாக்கும் பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் ஒருவரையொருவர் சேர்க்காமல், ஒருவரையொருவர் விட்டு விலகிச் செல்லும் வகையில் வரலாறு முன்வைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த (முன்னாள்) அரச குடும்பங்கள், நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு புதிய அமைப்புக்காக தங்கள் உரிமைகளை அர்ப்பணித்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக இந்த பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டது. முன்னாள் அரச குடும்பங்களின் தியாகங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் ஏக்தா நகரில் கட்டப்படும் என்றார்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories