images 66 - 2026

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை..

சற்றுமுன்
images 66 - 2026
images 65 - 2026

கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த அக்டோபா் 23ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் (29) அதே இடத்தில் உயிரிழந்தாா். முபீன் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடையதாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, என்.ஐ.ஏ.விடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.இதைத் தொடா்ந்து, காா் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையதாக 6 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கார் வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.கோவை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர்,ரத்தினபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது

கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்கள், தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனையானது நடத்தப்படுகின்றது.சென்னை, கொச்சின் ஆகிய பகுதிகளில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.