காஷ்மீரில் 2 பேருந்துகள் மோதி 3 பேர் பலி..

Published:

Pathankot acci1 - 2026

காஷ்மீரில் 2 பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில்13 வயது சிறுமி உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டம் ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை காலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.

இதில், 13 வயது சிறுமி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் அனைவரும் சம்பா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்துள்ள 7 பேர் வேறு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சம்பா மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் பாரத் பூஷன் தெரிவித்தார். 

Pathankot acci2 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img