கனமழை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..

Published:

chennai rains 3 1 - 2026

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதனால் பல மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது .

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. இதனிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

24 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக…
சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,மயிலாடுதுறை,திருவாரூர், நாகப்பட்டினம்
, தஞ்சாவூர்,வேலூர்,ராணிப்பேட்டை, விழுப்புரம்
,அரியலூர்,கடலூர்,பெரம்பலூர்,புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம்,ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி,திருச்சி,மதுரை,தேன, திண்டுக்கல், கரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது

பள்ளிகளுக்கு மட்டும்… சிவகங்கை,, நாமக்கல்,திருப்பத்தூர் (8ம் வகுப்பு வரை, தருமபுரி மாவட்டத்தில் இன்று (11-11-2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இதுதவிர, புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் இன்றும் நாளையும் (11-11-2022, 12-11-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img