சபரிமலை ஐயப்பன் கோயில் இன்னும் சிலமணி நேரங்களில் நடைதிறக்கப்பட உள்ள நிலையில் பம்பையில் பக்தர்கள் மிக அதிகமாக காலை முதலே முகாமிட்டிருந்தனர்.பலத்த சோதனைக்கு பிறகு மலை யேற அனுமதிக்கப்பட்டனர்.சன்னிதான வளாகம் நடைபந்தல் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மாலை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலப் பூஜைக்காக இன்று மாலை5மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலம் நாளை முதல் 41 நாள்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை மேல்சாந்தி திறந்துவைக்கிறார். பின்னர் ஐயனின் தவ அலங்காரம் களைந்து பக்தர்களுக்கு பஷ்ப பிரசாதம் வழங்கப்படும்.வேறு பூஜைகள் ஏதுமின்றி இரவு 10 மணியளவில் நடை அடைக்கப்படுகிறது. இதையடுத்து நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு இந்தாண்டுக்கான மண்டலக் காலம் தொடங்கும்.
ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முன்பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம். முன்பதிவு செய்யாத பக்தர்கள் கோயில் அருகே முன்பதிவு செய்ய சபரிமலை பாதையில் 13 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பக்தர்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை கொரோனா ஊசி போட்ட சான்றிதழ் வைத்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.
கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு அதிகளவிலான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பம்பா நிலவரம் இதுவரை மாலை 5 மணிக்கு தரிசனம் செல்ல பக்தர்களை பிற்பகலிலு மலையேற அனுமதி த்து ஆன்லைன் சோதனை செய்யும் இடம் தற்போது தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நிலக்கல்லில் இருந்து வரும் பக்தர்களை பம்பாவில் இறக்கி விட ப்படுகின்றனர்.பம்பாவிலிருந்து மலையேற அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சபரிமலை நடைபாதை எங்கும் சரணஹோஷம் கேட்கிறது.