
சபரிமலையில் சுவாமி ஐயப்பன் சன்னிதானத்தில் புதிய சபரிமலை மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி அதிகாலை 3 மணிக்கு சன்னதியை திறந்து வைக்க இந்த ஆண்டு 41நாள் மண்டல காலம் கோலாகலமாக துவங்கியது.
வாழ்வின் ஐந்து நிலைகள் வழியாக யாத்திரை செய்து பரசுராமன் பிரதிஷ்டை செய்யப்பட்ட சஹ்யபர்வத மலையில் உள்ள சாஸ்தா கோவில்கள் வழியாக ஒரு பயணம்…
சிறுவயதில் சாஸ்தா குளத்துப்புழாவிலும், இளமையில் ஆரியங்காவிலும், இளமையில் அச்சன்கோவியிலும், முதுமையில் சபரிமலையிலும், கந்தமலையில் வானபிரஸ்தத்திலும்…சுவாமி சரண் என்று நம்பப்படுகிறது.
இதில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை வழிபாடுகள் 41நாள் விமர்சையாக நடைபெறும் .
மண்டல-மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை புதன்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரிகண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து நெய் தீபமேற்றி அணையாவிளக்கில் தீபமேற்றி 18படி அருகே உள்ள தேங்காய் ஆழியில் தீபமேற்றி வைத்தார்.தந்திரி கண்டரரு ராஜீவரு ஐயனின் தவக்கோலத்தை களைந்து ஐயரிடம் 41நாள் மண்டலபூஜை நடத்த அனுமதி கேட்டு பக்தர்களுக்கு பஷ்ப பிரசாதம் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து 18-ம்படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், புதிய மேல்சாந்திகள் பதவியேற்றனர். சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயராமன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில்மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹரிகுமார் நம்பூதிரி ஆகியோர் பதவி ஏற்பு நிகழ்ச்சி தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் சன்னிதானத்தில் நடைபெற்றது.இன்று (வியாழக்கிழமை) அதிகாலை புதிய மேல்சாந்தி நடை திறந்து நெய்விளக்கு ஏற்றி வைக்க 41நாள் மண்டலபூஜை வழிபாடு துவங்கியது. மண்டல காலத்தில் நெய் அபிஷேகம் உட்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும். நடப்பு சீசனையொட்டி, அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறும்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் மண்டலகாலத்தில் தினமும் அதிகாலை 2.30 மணிக்கு திருக்கோயில் எழுந்தருளல்
3 மணிக்கு நாடை திறப்பு,நிர்மால்ய தரிசனம்
3.05 மணிக்கு நெய் அபிஷேகம்
3.30 மணிக்கு … கணபதி ஹோமம்
3.45 முதல் 7 மணி வரை, காலை 8 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம்
7.30 மணிக்கு உஷபூஜை
11.30.க்கு 25 கலசாபிஷேகம்
பிறகு களபாபிஷேகம்
மதியம் 12.30 மணிக்கு மதியம் உச்சிபூஜை வழிபாடு
மதியம் 1 மணிக்கு கோவில் அடைப்பு
மாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்படும்
6.30 மணிக்கு தீபாராதனை
7 முதல் மலரபிஷேகம்,இரவு
9 மணிக்கு இரவு பூஜை(அத்தாள பூஜை ,இரவு 10.50 மணிக்கு ஹரிவராசனம் சங்கீர்த்தனம் பாடப்பட்டு, 11 மணிக்கு சன்னிதானம் மூடப்படும்.
