சபரிமலையில் இன்று புதிய மேல்சாந்தி நடை திறந்து வைக்க 41நாள் மண்டல பூஜை கோலாகலமாக துவங்கியது..

FB IMG 1668664592508 - 2026

சபரிமலையில் சுவாமி ஐயப்பன் சன்னிதானத்தில் புதிய சபரிமலை மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி அதிகாலை  3 மணிக்கு சன்னதியை திறந்து வைக்க இந்த ஆண்டு  41நாள் மண்டல காலம் கோலாகலமாக துவங்கியது.

வாழ்வின் ஐந்து நிலைகள் வழியாக யாத்திரை செய்து பரசுராமன் பிரதிஷ்டை செய்யப்பட்ட சஹ்யபர்வத மலையில் உள்ள சாஸ்தா கோவில்கள் வழியாக ஒரு பயணம்…
சிறுவயதில் சாஸ்தா குளத்துப்புழாவிலும், இளமையில் ஆரியங்காவிலும், இளமையில் அச்சன்கோவியிலும், முதுமையில் சபரிமலையிலும், கந்தமலையில் வானபிரஸ்தத்திலும்…சுவாமி சரண் என்று நம்பப்படுகிறது.

இதில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை வழிபாடுகள் 41நாள் விமர்சையாக நடைபெறும் .

மண்டல-மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை  புதன்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி‌கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து நெய் தீபமேற்றி அணையாவிளக்கில் தீபமேற்றி 18படி அருகே உள்ள தேங்காய் ஆழியில் தீபமேற்றி வைத்தார்.தந்திரி கண்டரரு ராஜீவரு ஐயனின் தவக்கோலத்தை களைந்து ஐயரிடம் 41நாள் மண்டலபூஜை நடத்த அனுமதி கேட்டு ‌பக்தர்களுக்கு பஷ்ப பிரசாதம் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து 18-ம்படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், புதிய மேல்சாந்திகள் பதவியேற்றனர். சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயராமன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில்மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹரிகுமார் நம்பூதிரி ஆகியோர் பதவி ஏற்பு நிகழ்ச்சி தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் சன்னிதானத்தில் நடைபெற்றது.இன்று (வியாழக்கிழமை) அதிகாலை புதிய மேல்சாந்தி நடை திறந்து நெய்விளக்கு ஏற்றி வைக்க 41நாள் மண்டலபூஜை வழிபாடு துவங்கியது. மண்டல காலத்தில் நெய் அபிஷேகம் உட்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும்.    நடப்பு சீசனையொட்டி, அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறும்.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் மண்டலகாலத்தில் தினமும் அதிகாலை 2.30 மணிக்கு திருக்கோயில் எழுந்தருளல்
3 மணிக்கு நாடை திறப்பு,நிர்மால்ய தரிசனம்
3.05 மணிக்கு நெய் அபிஷேகம்
3.30 மணிக்கு … கணபதி ஹோமம்
  3.45 முதல் 7 மணி வரை, காலை 8 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம்
7.30 மணிக்கு உஷபூஜை
11.30.க்கு 25 கலசாபிஷேகம்
பிறகு களபாபிஷேகம்
மதியம் 12.30 மணிக்கு மதியம் உச்சிபூஜை வழிபாடு
மதியம் 1 மணிக்கு கோவில் அடைப்பு
மாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்படும்
6.30 மணிக்கு தீபாராதனை
7 முதல் மலரபிஷேகம்,இரவு
9 மணிக்கு இரவு பூஜை(அத்தாள பூஜை ,இரவு 10.50 மணிக்கு ஹரிவராசனம் சங்கீர்த்தனம் பாடப்பட்டு, 11 மணிக்கு  சன்னிதானம் மூடப்படும்.

FB IMG 1668664596818 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories