images 27 - 2026

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு…

சற்றுமுன்
images 27 - 2026

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39,600க்கு விற்பனையானது வாடிக்கையாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,950க்கு விற்பனையாகிறது.  ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,300 குறைந்து ரூ.67,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.

அந்த வகையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.39,600-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை, ரூ.1.30 குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.20 க்கும், விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1300 குறைந்து, ரூ.67,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.