மகாராஷ்டிரா,அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்..

Published:

1796052 quake - 2026

மகாராஷ்டிரா அருணாச்சல பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை 4.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரின் வடக்கே இன்று அதிகாலை 4.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாசிக் நகரத்திற்கு 89 கி.மீ. வடக்கில், தரைமட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதுவும் வெளியாகவில்லை.

அருணாச்சல பிரதேசத்திலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவானது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள லெபா-ராடா மாவட்டத்தில் உள்ள பாசார் நகரில் புதன்கிழமை காலை 7:1 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. .

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிக்கையின் படி, புதன்கிழமை காலை சுமார் 7:1 மணியளவில் பாசர் நகரின் 58 கி.மீ வட-மேற்குகில் பூமிக்கு அடியில்10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img