ராஜபாளையம் செங்கோட்டை வழியாக செல்லும் எர்ணாகுளம் -வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.சபரிமலை செல்ல புனலூர் வழியாக வேளாங்கண்ணி -எர்ணாகுளம் (06036) ரயிலை பக்தர்கள் பயன் படுத்தி கொள்ளலாம்.
சபரிமலைக்கு மிக அருகே இருக்கும் புனலூர் இரயில் நிலையம் வழியாக வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
தமிழக டெல்டா மாவட்ட ஐயப்பசுவாமிகளுக்கு வசதியாக ஐயப்பன் கோவிலின் மிக அருகாமையில் உள்ள சபரிமலை நுழைவாயிலான புனலூர் வழியாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை ,காரைக்குடி ,மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை , புனலூர், கொல்லம், கோட்டயம் வழியாக எர்ணாகுளம்(கொச்சி) வரை இயக்கப்படுகிறது
இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை புனலூர் வழியாக கொச்சி ( எர்ணாகுளம்)சென்றடையும்.ஸ்லீப்பர், 3ஏ/சி, 2ஏ/சி, முன்பதிவில்லா பெட்டிகளோடு மொத்தம் 14 பெட்டிகளோடு இயங்கும் இந்த ரயில் நேரம் வரும் நவ26முதல் எர்ணாகுளம் நவ27முதல் வேளாங்கண்ணி மில் இருந்து மாற்றப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு இரயிலுக்கு புனலூர் இரயில் நிலையத்திலிருந்து நேரடியாக பொம்மைக்கு கேரள அரசின சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பழைய 100 ஆண்டுகள் பாரம்பரிய சபரிமலை இரயில் வழிப்பாதையான செங்கோட்டை-புனலூர்-கொல்லம் இரயில் வழித்தடத்தை பயன்படுத்தி ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்பழா ஆகிய ஐயப்ப திருத்தலங்களுக்கும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி யாத்திரை செல்லலாம்.