சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆட்டோ சரக்குவாகனம் பைக்கில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.ஐய்யப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக சில கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்க வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அய்யப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக சில கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் கேரள மோட்டார் வாகனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சபரிமலைக்கு தரிசனத்திற்கு வரும் ஐய்யப்ப பக்தர்கள் பொது போக்குவரத்து மற்றும் வாடகை, சொந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டும். ஆட்டோ, சரக்கு வாகனங்களை பயன்படுத்தி சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ள கூடாது. அதேபோல் மோட்டார் சைக்கிள்களிலும் பம்பைக்கு செல்லக்கூடாது.இதுபோன்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். தூக்கமின்மை அல்லது சோர்வுடன் பயணம் செய்வது ஆபத்தானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.