
குஜராத்தில் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஜனநாயக கடைமையை ஆற்ற வேண்டும் என குஜராத்தில் புதிய இளம் வாக்காளர் களை பிரதமர் மோடி அழைத்துள்ளார்
குஜராத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி முதல் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு எண்ணிக்கையில் பயன்படுத்துமாறு அழைக்கிறேன் என அழைத்துள்ளார்.
குஜராத்தில் இன்று முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- குஜராத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்கும் அனைவரையும், குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு எண்ணிக்கையில் பயன்படுத்துமாறு அழைக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி
குஜராத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. 89 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆமதாபாத், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.காலை எட்டு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை ஐந்து மணி வரை நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணி நிலவரப்படி 18.95 % வாக்குகள் பதிவாகியுள்ளது.
