
சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் சீருடை அணியா போராட்டத்தில் ஈடுபட்டனர்:
தமிழகத்தில் போக்குவரத்து கழக நிர்வாகம் தொழிற்சங்கங்களோடு செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் இரண்டு செட் சீருடை வழங்க வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த அடிப்படையில் ஆண்டு ஒன்றுக்கு நாலு செட் சீருடை வழங்க வேண்டும்.
மதுரை போக்குவரத்து கழக நிர்வாகம் தற்போது ஒரு செட் மட்டுமே 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஆர்டர் போட்டுள்ளது. ஒரு செட் யூனிஃபார்ம் வழங்குவதற்கு ஒரு கோடியே ஐம்பது லட்சம் பணம் தேவைப்படுகிறதாம். ஏற்கனவே 10 ஆண்டுகளாக தையல் கூலி வழங்கவில்லை இப்போது வழங்கப்படும் சீருடைக்கும் தையற்கூலி கிடைக்குமா என்பது தெரியவில்லை . இதுகுறித்து பேச நிர்வாகம் 2019 போல் ஒரு செட் சீருடையுடன் ஒழித்துக் கட்ட நிர்வாகம் விரும்புகிறது.
ஆகவே ,அடுத்த செட்டு கிடைப்பதற்கு இப்போது எந்த வாய்ப்பும் இல்லை என்பது தான் நிர்வாகத்தின் முடிவாக உள்ளது .ஆகவே, தொழிலாளர்களை நிர்வாகம் ஏமாற்ற நினைக்கிறது கடந்த 10 ஆண்டுகளாக தையற் கூலி வழங்க மறுக்கிறது
என்று கூறி, மேலும் உடனடியாக அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டிய யூனிபார்ம் உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறி, சோழவந்தான் போக்குவரத்து கழக சி ஐ டி யு தொழிற்சங்கத்தின் சார்பாக இன்று யூனிபார்ம் அணியாமல் பேருந்துகளை இயக்கியும் மற்றும் பணிமனையில் வேலை செய்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.