27-01-2023 10:05 PM
More
  Homeசற்றுமுன்திமுக.,வை எதிர்த்தே அதிமுக.,வை எம்ஜிஆர்., தொடங்கினார் என்பது ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும்!

  To Read in other Indian Languages…

  திமுக.,வை எதிர்த்தே அதிமுக.,வை எம்ஜிஆர்., தொடங்கினார் என்பது ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும்!

  ஆகம விதிகளை மீறும்போது, மக்கள் மனமும் குமுறும், தெய்வம் மனமும் குமுறும் . ஆகம விதிமுறை மீறல் என்பது மக்கள் மனம் வருததப்படும்,தெய்வங்கள் மனமும்

  madurai udayakumar - Dhinasari Tamil

  மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் கோயில் ஆகம விதிமுறைகளை மீறினால் திமுகவிற்கு மக்களும், கடவுளும் தகுந்த பாடம் புகட்டுவார்கள்; திமுகவை எதிர்த்து தான் எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கினார் என்பது ஸ்டாலினுக்கு நன்றாக தெரியும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் பேட்டி அளித்தார்.

  கழக அம்மா பேரவையின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி .உதயகுமார் மகள் திருமணம் உட்பட 51 திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனை ,முன்னாள் முதலமைச்சர், எடப்பாடியார் நடத்தி வைக்கிறார். இதைத் தொடர்ந்து, திருமண விழா அழைப்பிதழை, மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோவில், ஜனகைநாராயண பெருமாள் கோவில், குருவித்துறையில் உள்ள, சித்திர வல்லபவபெருமாள் கோவிலில் வைத்து சாமி கும்பிட்டு, திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களுக்கும், அதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்களிடத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

  இந்த நிகழ்ச்சியில், ஒன்றை கழகச் செயலாளர் கொரியர் கணேசன், சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, பேரூர் கழகச் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  ஆர்.பி..உதயகுமார் கூறியதாவது: வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி புரட்சித்தலைவர் பிறந்த நாளை முன்னிட்டும், புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டும், கழக 51வதுஆண்டு பொன்விழாவை முன்னிட்டும்,கழக அம்மா பேரவையின் சார்பில் எனது மகள் திருமணம் உட்பட ,51 திருக்கல்யாணம் டி.குன்னத்தூர் உள்ள அம்மா கோவிலில் நடைபெறுகிறது.

  இதனை ,முன்னாள் முதலமைச்சர், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் திருமணத்தை நடத்தி வைக்கிறார். தேர்தலை மையமாக வைத்து கட்சிகள் உள்ளன.

  ஆனால் அதிமுகவோ மக்கள் நலனை மையக்கத்தாக கொண்டு ,ஆளுங்கட்சி என்றாலும், எதிர்க்கட்சி என்றாலும் மக்களுக்காகஉழைத்து வருகிறது.
  தமிழகத்தில் உள்ள கோயில்களில், ஆண்டாண்டு காலமாக வரலாற்று பதிவாக ஆகம விதிகளை கடைபிடிக்கபபட்டு வருகிறது. 

  தற்போது, ஆகம விதிகளை மீறும்போது, மக்கள் மனமும் குமுறும், தெய்வம் மனமும் குமுறும் . ஆகம விதிமுறை மீறல் என்பது மக்கள் மனம் வருததப்படும்,தெய்வங்கள் மனமும் வருத்தப்படும். ,நம்முடைய நம்பிக்கையை சீர்குழைக்கும் வகையில் ஆகம விதியை மீறினால், அரசுக்கு மக்களும், கடவுளும் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
  புரட்சித்தலைவர் அதிக நாட்கள் திமுகவில் இருந்தார் என்று  ஸ்டாலின் பேசியுள்ளார். திராவிட கொள்கைகளை மறந்து, ஜனநாயக கொள்களை மறந்து, குடும்ப ஆட்சியை திமுக நடத்தியது.

  ஏழை,எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அண்ணாவின் கொள்கைகளை உருவாக்கி, அண்ணாவின் பெயரில் அதிமுகவை ஆரம்பித்தார் புரட்சித்தலைவர்
  இருக்கும்பொழுது கருணாநிதியை கோட்டை பக்கம் கூட வர விடாமல் மக்கள் தடுத்தனர். அதையெல்லாம் மறைத்துவிட்டு முதலமைச்சர், தனக்குள்ள அதிகாரத்தை வைத்து தனது சொல்லை வலிமையாக்கி உள்ளார். திமுகவை எதிர்த்து தான் புரட்சித்தலைவர் அதிமுகவை தொடங்கினார்  என்பது முதலமைச்சருக்கு நன்றாக தெரியும்.

  நாணயத்தின் இரு பக்கங்களாக எதிர்க்கட்சியும், ஆளுங்கட்சியும் இருக்க வேண்டும். தற்போது, ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக, எதிர்க்கட்சியை எதிர்கொள்வதில் பூஜ்யம் அடைந்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது அரசின் மீது பழி போடுவதும், அவதூறு பரப்புவதில் வல்லவர்கள். 

  ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு, இப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதனை மீட்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

   முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திட, மாபெரும் சட்டப் போராட்டம் செய்து, அதன் மூலம் முல்லை பெரியார் அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்துக் கொள்ளலாம் என்ற வரலாற்றை அம்மா பெற்று தந்தார்கள்.

  ஆனால், கேரளா அரசு ரூட் கர்வ் விதிகளை புகுத்தி ,பருவ காலத்தில் நீரை தேக்கவிடாமல் நீரைதிறந்து விட்டு, இன்றைக்கு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து வருகிறது. முல்லைபெரியார் என்பது, ஐந்து மாவட்ட மக்கள் ஜீவாதார பிரச்சினையாகும். அணை வலுவாக உள்ளது என்று வல்லுநர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கேரளா அரசு  சுயநலத்தை விட்டு விட வேண்டும் என்று கூறினார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  16 − one =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Most Popular

  மக்கள் பேசிக்கிறாங்க

  ஆன்மிகம்..!

  Follow Dhinasari on Social Media

  19,059FansLike
  385FollowersFollow
  82FollowersFollow
  74FollowersFollow
  4,373FollowersFollow
  17,300SubscribersSubscribe

  சமையல் புதிது..!

  COMPLAINT BOX | புகார் பெட்டி :

  Cinema / Entertainment

  வசூலில் சாதனை படைத்த பதான்..

  சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

  விஜய்யின் ‘வாரிசு’ ரூ.210 கோடி வசூலா? தயாரிப்பாளர்கள் பொய் சொல்கிறார்கள்- இயக்குநர் எச்.வினோத்

  விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ பட வசூல் நிலவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வம்சி...

  RRR பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப்’ விருது; பிரதமர் மோடி வாழ்த்து !

  தமிழ் திரைப்படத்துறை இதிலிருந்து நல்ல பாடம் கற்கவேண்டும் என்று தேசபக்த திரை நட்சத்திரங்களிடமிருந்து குரல் எழுந்து வருகிறது.

  பொங்கல் கொண்டாட்டம்‌ துவங்கியாச்சு- துணிவு,வாரிசு ஆட்டநாயகன் யார்…?

  துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களுக்குமே இன்று ‌வெளியாகி பலரும் பார்த்து விமர்சனங்களை...

  Latest News : Read Now...