சாமிதோப்பு தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு..

Published:

1801163 samithoppu - 2026

சாமிதோப்பு தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .இந்த விழா தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது. வருகிற 16-ந்தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடக்கிறது.

சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய பக்தர்களுக்கும் அகிலத்திரட்டு நூல் மூலம் கூறிய கருத்துகளை திருஏடாக வாசிப்பது வழக்கம். இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கியது. இந்த விழா தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பணிவிடை, மதியம் உச்சி படிப்பும், மாலையில் ஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது. 15-ம் நாள் விழாவான வருகிற 16-ந் தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு, அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து வைகுண்டசாமிக்கு பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி, இனிமம் வழங்கு நிகழ்ச்சி, 18-ந் தேதி ஏடு வாசிப்பு, அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img