
சபரிமலையில் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்
இன்று முதல் வரும் டிசம்பர் 18ம் தேதி வரை
இரவு 11.20 மணி்க்கு ஹரிவராசனம் 11.30 நடை அடைக்கப்படும்
மாலை 3 மணி முதல் இரவு 11.30 வரை கோவில் திறந்திருக்கும்.
மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படுவதை மதியம் 1:30 அல்லது 2 மணி வரை திறந்திருக்கலாமா என்று தந்திரியிடம் ஆலோசனை கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று திருவாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சபரிமலையில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் ..
12-ந்தேதி வழிபட முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஐயப்ப பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், சபரிமலையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்திருந்தது. அதன்படி நடை திறக்கப்பட்ட நாள் முதலே தரிசனம் செய்ய பலரும் முன்பதிவு செய்து சபரிமலை வந்து வழிபட்டனர். இது தவிர நிலக்கல் உள்பட பல இடங்களில் உடனடி முன்பதிவு மையங்களும் செயல்பட்டன. அவற்றில் முன்பதிவு செய்தும் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இருப்பினும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
இதனால் பக்தர்கள் 18-ம் படி ஏறவும், ஐயப்பனை தரிசனம் செய்யவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கோவில் நடை திறப்பு நேரத்தை காலை, மாலை வேளைகளில் தலா 1 மணி நேரம் அதிகரித்தும் காத்திருப்பு நிலை தொடரவே செய்கிறது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 18 மணி நேரம் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பக்தர்கள் தங்களுக்கான முன்பதிவு நேரத்தில் இருந்து சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தான் தரிசனம் பெற முடிகிறது.
தினசரி அதிகபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு நடை திறக்கப்பட்டதில் இருந்து நேற்று தான் அதிகபட்ச பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலையில் இன்று தரிசனத்துக்காக ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் முன்பதிவு செய்து தரிசனம் செய்தனர் . நாளை 12-ந் தேதி தரிசனத்திற்கு 1 லட்சத்து பத்தாயிரம் பேர் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ள தாக கூறப்படுகிறது. வருகிற 27-ந் தேதி மண்டல பூஜை நெருங்கி வருவதால் அன்றைய தினம் தரிசனத்திற்கு ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.