பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான பேரணி தற்காலிகமாக வாபஸ்..

images 2022 12 19T115617.806 - 2026

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக பேரணி பேச்சுவார்த்தையையடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்டது. 

சென்னையின் 2-வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், சர்வதேச ஒப்பந்தப்புள்ளி(டெண்டர்) கோரப்பட்டுள்ளது. 

இதனிடையே, பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு முதலாக, இதை எதிர்த்து ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட அனைத்து 13 கிராம பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது போராட்டம் 150-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், போராட்டத்தின் ஒருபகுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று (டிச. 19) பேரணி நடத்தப்படும் என பரந்தூர் விமான நிலைய கிராம மீட்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறியும் திட்டமிட்டபடி இன்று பேரணி நடைபெற்றது. 

அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கிராம மக்கள் கருப்புக்கொடியுடன் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, கோட்டாட்சியர், காஞ்சிபுரம் எஸ்.பி. தாசில்தார் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அன்பரசன் ஆகியோர் அடங்கிய குழு இதுகுறித்து நாளை ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories