
“அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் அரசியல்ரீதியாக விமர்சிப்பதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால், இந்திய ராணுவ வீரர்களை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 9-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டம், யாங்சி எல்லைப் பகுதியில் சுமார் 600 சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய இந்திய ராணுவ வீரர்கள், தக்க பதிலடி கொடுத்து
விரட்டியடித்தனர்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, “இந்திய நிலப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்தியா மீது போர் தொடுக்க சீன ராணுவம் தயாராகி வருகிறது. ஆனால், மத்திய அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது’’ என்று குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார். இந்திய எல்லையை யாராலும் தன்னிச்சையாக மாற்ற முடியாது. குறிப்பாக, சீனாவால் எல்லைக் கோட்டை மாற்ற முடியாது. சீனாவின் அத்துமீறல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். ராகுல் காந்தியின் உத்தரவின்படி எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்கள் செல்லவில்லை. பிரதமர் மோடியின் உத்தரவின்படியே எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்கள் சென்றனர்.
“அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் அரசியல்ரீதியாக விமர்சிப்பதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால், ராணுவ வீரர்கள் அடிவாங்குகிறார்கள் என்பது போன்ற கருத்துகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன. இந்திய ராணுவ வீரர்களை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதிகளில், சுமார் 13,000 அடி உயரத்தில் நமது வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தி பாராட்ட வேண்டியது நமது கடமை’’ என்றார்.
சொந்த நாடு குறித்து பெருமையாக காங்கிரஸ் பேசாவிடினும், நம் இராணுவ வீரர்களின் தியாகங்களை சிறுமை படுத்துவதையும், அவர்களின் வீரத்தை கேள்விக்குள்ளாக்குவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
2016 ல் நடைபெற்ற துல்லிய தாக்குதலையும், 2019 ல் நடந்த புல்வாமா தாக்குதலையும் காங்கிரஸ் நமது இராணுவத்தை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஷங்கரின் அறிவுரை அவர்கள் மூளைக்கு எட்டுமா என்பதே கேள்வி!