சபரிமலை-இன்று மகரஜோதி பூஜை துவங்கிய முதல் நாளே பக்தர்கள் வருகை அதிகரிப்பு..

FB IMG 1672475728086 - 2026
FB IMG 1672475978404 - 2026

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை 3 மணிக்கு மகரஜோதி விழாவுக்காக கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை துவங்கிய முதல் நாளே பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சபரிமலை திணறி வருகிறது.சபரிமலையில் இன்று (31/12/2022) ஐயப்பனை தரிசனம் செய்ய 89929 பேர் முன்பதிவு செய்துள்ளனர். நேற்று (30-12-22) 27769 பேர் வருகை தந்துள்ளதாக சமீபத்திய தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. 41 நாட்களாக நடந்த மண்டல பூஜை நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 27-ந் தேதி கோவில் நடை அடைக்கப்பட்டது. அடுத்து ஜனவரி 14-ந் தேதி மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. இதற்காக கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரூ ராஜிவரரூ கோவில் நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்தினார்.

500x300 1814852 sabarimala - 2026
FB IMG 1672417000060 - 2026

இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. வருகிற 14-ந் தேதி சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு வர தொடங்கி உள்ளனர். மகர விளக்கு பூஜையில் பங்கேற்க இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக நேற்றிரவே ஏராளமான பக்தர்கள் பம்பையில் காத்திருந்தனர். இன்று ஒரு நாளில் மட்டும் தரிசனம் செய்ய 8க்ஷ90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

மகரஜோதி திருவிழாவில் முக்கிய விழாவாக எருமேலி பேட்டை துள்ளல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது. 12-ந் தேதி பந்தளத்தில் இருந்து திருவாபரண பெட்டி ஊர்வலம் புறப்படுகிறது. 13-ந் தேதி பம்பை தீபம் மற்றும் பம்பா சத்யா நடைபெறும். மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் வருகிற 18-ந் தேதி நிறைவடைகிறது. வருகிற 19-ந் தேதி மகரவிளக்கு புனித யாத்திரை நிறைவடைந்து மாளிகைப் புரத்தில் இறுதி நிகழ்வாக குருதி பூஜை நடைபெறும். அதன் பிறகு 20-ந் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின் காலை 7 மணிக்கு நடை அடைக்கப்படும். சபரிமலைக்கு மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. கோவில் சன்னிதானம் மற்றும் பம்பை முதல் நிலக்கல் வரை சுமார் 1500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல சபரிமலை வரும் பக்தர்களுக்காக மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories