பிரதமர் மோடியை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ..

modi mirosoft 1 - 2026

பிரதமர் மோடியுடன் மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளா இன்று சந்தித்து பேசினார்.
தொழில்நுட்பத்தை மையப்படுத்திய வளர்ச்ச்சியில் இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெள்ளாவுடனான சந்திப்புக்குப் பிறகு இதனை அவர் தெரிவித்தார்.

நான்கு நாள் பயணமாக மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆதரவளிக்கும் என உறுதியளித்துள்ளார். 

பிரதமருடனான சந்திப்பு குறித்து சத்ய நாதெள்ளா கூறியதாவது: பிரதமருடனான இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக அமைந்தது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் மையமாக வைத்து அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்த அளவுக்கு ஆழமாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் சிறப்பாக செயல்படுவதையும் பார்ப்பது உத்வேகம் அளிக்கிறது. இந்த வளர்ச்சிப் பாதையில் இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கத்தினை நிறைவேற்ற உதவியாக இருக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: உங்களை சந்தித்ததில் மிக்க மகிச்சியடைகிறேன் சத்ய நாதெள்ளா.தொழில்நுட்பத்தை மையப்படுத்திய வளர்ச்ச்சியில் இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நமது இந்திய இளைஞர்கள் இந்த உலகை, தொழில்நுட்பத்தில் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் திறன் கொண்ட பல்வேறு யோசனைகளை தங்களுக்குள் வைத்துள்ளனர் எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories