
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் கானப்பட்டாலும், அவ்வபோது ஒரே அடியாக விலை அதிகரித்து உயர்ந்துகொண்டே தான் செல்கிறது. சில நாட்களில் விலை குறைந்தாலும், பல நாட்களில் விலை அதிகரித்த வண்னம் உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.42,080க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ரூ.5,260க்கு விற்கப்படுகிறது. அதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.74.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.
பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும். பெரும்பாலும் முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள். இதனால், தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.