திருவையாறு தியாகராஜர் 176-வது ஆராதனை விழா‌ பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடும் நிகழ்வு..

Published:

images 9 - 2026

திருவையாறு தியாகராஜர் 176-வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடும் நிகழ்வு தொடங்கியது.

927762 - 2026

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இந்த விழாவை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். விழாவில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை இசைக்கலைஞர்கள் பாடியும், இசைத்தும் தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடும் நிகழ்வு தொடங்கியது. இந்த விழாவை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான இசைக்கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியும், இசைத்தும் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, காலை 10 மணிக்கு நாகசுரம், 10.30 மணிக்கு விசாகா ஹரி குழுவினரின் ஹரி கதை, முற்பகல் 11 மணிக்கு தாமல் ராமகிருஷ்ணனின் உபன்யாசம் உள்பட தொடர்ந்து இரவு 10.20 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனிடையே, இரவு 8 மணிக்கு தியாகராஜ சுவாமிகள் வீதி உலா நடைபெறவுள்ளது.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img